ஆபீஸில் மாஸ்க் போடலைன்னா ஊழியர்களை உடனே வெளியேற்றவும்!-

தனியார் நிறுவனங்களுக்கு தமிழக சுகாதாரத்துறை கறார் உத்தரவு
முக‌க்கவசம்
முக‌க்கவசம்hindu கோப்பு படம்

"அலுவலகங்களில் பணிபுரியும்போது முக‌க்கவசம் அணியாதவர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும்" என்று தனியார் நிறுவனங்களுக்கு தமிழக சுகாதாரத்துறை கறார் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், தினசரி பாதிக்கப்பட்டு வருகிறவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இது ஒருபக்கம் மக்களை அச்சுறுத்தி வரும் நிலையில், மற்றொருபுறம் ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் வைரஸ் பரவலை தடுக்க, அரசு சுகாதாரத்துறை பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதனிடையே பல்வேறு மாநிலங்களில் அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் 50% பணியாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், அலுவலகங்களில் பணிபுரிபவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

"அலுவலகங்களில் பணிபுரியும் போது முக‌க்கவசம் அணியாதவர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும்" என்று தனியார் நிறுவனங்களுக்கு தமிழக சுகாதாரத்துறை சுற்ற‌றிக்கை அனுப்பியுள்ளது. அதில், "பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்வதை உறுதி செய்ய வேண்டும். அறிகுறி உள்ள பணியாளர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். 300 நபர்களுக்கு மேல் உள்ள தொழிற்சாலைகளில் சுகாதார ஆய்வாளரை நியமிக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in