இன்று உரிமைத்தொகை இறுதிப் பட்டியல்... விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டாலும் முறையிடலாம்!

இன்று உரிமைத்தொகை இறுதிப் பட்டியல்... விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டாலும் முறையிடலாம்!

தமிழகத்தில் குடும்பத்தலைவிகளுக்கு வழங்கப்பட உள்ள மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு இருந்தாலும் அந்தந்த மாவட்ட வருவாய் அலுவலர்களிடம் சென்று முறையிடலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் இம்மாதம் 15ம் தேதி தொடங்கப்படுகிறது. இத்திட்டத்தை காஞ்சிபுரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதற்கான விண்ணப்பப் பதிவு முகாம்கள் இரண்டு கட்டங்களாகவும் மற்றும் விடுபட்டவர்களுக்கான சிறப்பு முகாம்களும் தொடர்ந்து நடத்தப்பட்டு 20.08.2023 அன்றுடன் விண்ணப்பங்கள் பதியும் பணி நிறைவடைந்தது.  மொத்தமாக 1.63 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டு கைபேசி செயலி வழியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேற்படி முகாம்களில் பெறப்பட்ட விண்ணப்பங்களில் அளிக்கப்பட்ட தகவல்களை சரிபார்க்க களஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இன்றுடன் இந்த பணிகள் முடிக்கப்பட்டு தகுதியானவர்கள் பட்டியல் இறுதி செய்யப்பட உள்ளது. அரசு சார்பில்  விண்ணப்பங்களின் நிலை குறித்து சம்பந்தபட்ட மகளிரின் கைப்பேசி எண்ணுக்கு மெசேஜ் அனுப்பி வைக்கப்படுகின்றன.

மேற்படி முகாம்களில் பெறப்பட்ட விண்ணப்பங்களில் அளிக்கப்பட்ட தகவல்களைச் சரிபார்க்க களஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இன்றுடன் இந்த பணிகள் முடிக்கப்பட்டு தகுதியானவர்கள் பட்டியல் இறுதி செய்யப்பட உள்ளது. அரசு சார்பில்  விண்ணப்பங்களின் நிலை குறித்து சம்பந்தபட்ட மகளிரின் கைப்பேசி எண்ணுக்கு மெசேஜ் அனுப்பி வைக்கப்படுகின்றன.

விண்ணப்பதாரர்களுக்கு ஒருவேளை உரிமைத்தொகை நிராகரிக்கப்பட்டதாக மெசேஜ் வந்தாலும், தகுதியான விண்ணப்பதாரர்கள், இதுகுறித்து மாவட்ட வருவாய் கோட்டாட்சியரிடம் மேல்முறையீடு செய்து தீர்வு பெறலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in