பாம்பு பிடிக்க இவர்களுக்குத்தான் தமிழக அரசு லைசன்ஸ்!

பாம்பு பிடிக்க இவர்களுக்குத்தான் தமிழக அரசு லைசன்ஸ்!

இருளர் இன மக்களின் கோரிக்கையை ஏற்று பாம்பு பிடிப்பதற்கு அனுமதி வழங்கிய தமிழக அரசு, அதற்கான அரசாணையைப் பிறப்பித்துள்ளது.

தமிழ்நாட்டில் பாம்பு பிடிக்கும் தொழிலில் இருளர் இன மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். பாம்புகளைப் பிடிக்கவும், வி‌ஷத்தை விற்கவும் ஆண்டுதோறும் இருளர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இதற்காக அமைக்கப்பட்ட பாம்பு பிடிப்போர் கூட்டுறவு சங்கம் சென்னையை அடுத்த முட்டுக்காட்டில் இயங்கி வருகிறது.

இருளர்கள் பாம்புகளைப் பிடித்து அதிலிருந்து வி‌ஷத்தை எடுத்து ஜாடியில் அடைத்து மருந்து கம்பெனிகளுக்கு விற்பனை செய்வார்கள். வி‌ஷமுறிவு மருந்து தயாரிக்க நல்லபாம்பு, கட்டுவிரியன், கண்ணாடி விரியன், சுருட்டை பாம்பு ஆகிய இனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

பாம்பு பிடிக்க வன உயிரினச் சட்டப்படி அரசிடம் அனுமதி பெற வேண்டும். இதற்காக ஆண்டுதோறும் இருளர் பாம்பு பிடிப்போர் தொழில் கூட்டுறவு சங்கத்துக்கு அரசு லைசன்ஸ் வழங்கும்.

இந்தச் சூழலில், வனத்துறை அனுமதி வழங்காத காரணத்தால் நூற்றுக்கணக்கான இருளர் இன மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருந்தது. அவர்களின் நெடுநாள் கோரிக்கையை ஏற்று பாம்பு பிடிப்பதற்கான அனுமதியை தமிழக அரசு தற்போது வழங்கியுள்ளது. இதற்கான அரசாணையையும் பிறப்பித்துள்ளது.

இதன்படி 2021- 2022-ம் ஆண்டில் மொத்தம் 5 ஆயிரம் பாம்புகளைப் பிடிக்கவும், வி‌ஷத்தை விற்கவும் இருளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.