தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

24 மணிநேரத்தில் அடுத்தடுத்து நடந்த அட்டூழியம்
தமிழக மீனவர்கள்
தமிழக மீனவர்கள்hindu கோப்பு படம்

தமிழக மீனவர்கள் 3 பேர் மீது இன்று காலை தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் மீண்டும், நாகை, வேதாரண்யத்தை சேர்ந்த மேலும் 8 மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே உள்ள புஷ்பவனத்தை சேர்ந்த நாகமணி என்பவருக்கு சொந்தமான படகில் சென்ற நாகமுத்து, பன்னீர்செல்வம், ராஜேந்திரன் ஆகிய மூன்று பேர் கோடிக்கரைக்கு தென் கிழக்கே மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள், மீனவர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியதோடு, அவர்களிடமிருந்த 200 கிலோ வலை, ஜிபிஎஸ் கருவி, வாக்கிடாக்கி உள்ளிட்ட ஒரு லட்சம் மதிப்புள்ள மீன்பிடி உபகரணங்களை கொள்ளையடித்து சென்றனர். காயமடைந்த மீனவர்கள் 3 பேரும், சக மீனவர்கள் உதவியுடன் கரை திரும்பிய நிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, இந்த சம்பவம் நடைபெற்ற சில மணிநேரத்திற்கு பிறகு, மீண்டும் அதே பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகை மாவட்ட மீனவர்கள் 8 பேர் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். பின்னர், அவர்களிடமிருந்த வலைகளை அவர்கள் பறித்துச் சென்றுள்ளனர். இதையடுத்து காயமடைந்த மீனவர்கள் கரை திரும்பினர். கடந்த 24 மணிநேரத்தில் 11 மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், முன்னாள் அமைச்சரும், வேதாரண்யம் சட்டமன்ற உறுப்பினருமான ஓ.எஸ்.மணியன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மீனவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். இதையடுத்து பேசிய ஓ.எஸ்.மணியன், இந்த பிரச்னையில் மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு என்ன செய்கிறோம் என்பதையும் என்ன செய்திருக்கிறோம் என்பதையும் வெளிப்படையாக சொல்ல வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in