`மாணவர்களே தற்கொலை வேண்டாம்; பெற்றோர்களின் எதிர்காலம் நீங்கள்தான்'

தமிழக டிஜிபி சைலேந்திர பாபு அறிவுரை
`மாணவர்களே தற்கொலை வேண்டாம்; பெற்றோர்களின் எதிர்காலம் நீங்கள்தான்'

"மாணவர்களாகிய நீங்களே உங்களது பெற்றோர்களின் எதிர்காலம், சிறு பிரச்சினைக்காக திடீரென உயிரை மாய்த்து கொள்வதால் பெற்றோர்கள் படும் கஷ்டத்தை நினைத்து பார்க்க வேண்டும். தற்கொலை செய்து கொள்வது சமுதாய குற்றம். எனவே மாணவர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபட கூடாது" என்று தமிழக டிஜிபி சைலேந்திர பாபு அறிவுரை வழங்கியுள்ளார்.

தமிழக டிஜிபி சைலேந்திர பாபு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பேசிய அவர், சமீப காலமாக சிறு, சிறு பிரச்சினைகளுக்கெல்லாம் பள்ளி, கல்லூரி, மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றது. எனவே பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் சிறிய பிரச்சினைகளுக்காக தற்கொலை முடிவுக்கு செல்லக்கூடாது என அறிவுரை வழங்கி உள்ளார்.

மேலும் குறைவான மதிப்பெண், சிறு தோல்வி, வகுப்பு தலைவராக நியமிக்கவில்லை போன்ற சிறு காரணங்களுக்காக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் தற்கொலை மற்றும் தற்கொலை முயற்சி போன்ற மோசமான முடிவுகளை எடுப்பதாக தெரிவித்துள்ள அவர், மாணவர்களாகிய நீங்கள் நாட்டின் சொத்து எனவும், தற்கொலை செய்து கொள்வது சமுதாயத்திற்கு எதிரான குற்றம் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், "சிறிய பிரச்சினைகளுக்காக மாணவர்களாகிய நீங்கள் தற்கொலை செய்து கொண்டால், பின் வரும் நாளில் நீங்கள் நாட்டின் முதல்வராகவோ, அரசு தலைமை பதவிலோ, விஞ்ஞானியாகவோ, காவல்துறை தலைவராகவோ எப்படி ஆக முடியும். ஆகவே மாணவர்களாகிய உங்களுக்கு நீண்ட வாய்ப்புகள் உள்ளது. மாணவர்களாகிய நீங்களே உங்களது பெற்றோர்களின் எதிர்காலம், சிறு பிரச்சினைக்காக திடீரென உயிரை மாய்த்து கொள்வதால் பெற்றோர்கள் படும் கஷ்டத்தை நினைத்து பார்க்க வேண்டும்.

தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் மாணவர்களுக்கு ஏற்பட்டால் உடனடியாக அருகிலுள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தின் ஆய்வாளரை தொடர்பு கொண்டு ஆலோசனைகளை பெற்றுகொள்ளலாம். தற்கொலை தடுப்பு உதவி மைய எண் 1098 மற்றும் 9152987821 என்ற உதவி எண்னை தொடர்பு கொண்டு ஆலோசனை பெற வேண்டும். எனவே மாணவர்கள் வரப்போகும் தேர்வுகளுக்கு தயாராக இருக்க வேண்டும். மாணவர்களுக்கு படிப்பே சுகமானதாக இருக்கும்" என்று சைலேந்திர பாபு அறிவுரை வழங்கினார்.

Related Stories

No stories found.