மக்களிடம் குறை கேட்ட முதல்வர்: சில புகைப்படத் தருணங்கள்!

மக்களிடம் குறை கேட்ட முதல்வர்: சில புகைப்படத் தருணங்கள்!
Updated on
1 min read

இன்று தேசிய பஞ்சாயத் ராஜ் தினம் கொண்டாடப்படும் நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே செங்காடு கிராமத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். கூட்டத்தில் பங்கேற்றிருந்த பலதரப்பட்ட மக்களிடமும் முதல்வர் உரையாடினார். அரசின் நலத்திட்டங்கள் அவர்களைச் சென்று சேர்ந்திருக்கிறதா, அவர்களுக்கான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றனவா, வேறு என்ன குறைகள் உள்ளன என்பதை மக்களிடம் நேரில் கேட்டறிந்தார்.

நிகழ்ச்சியில் சில முக்கியத் தருணங்கள் புகைப்படங்களாக உங்கள் பார்வைக்கு...

காஞ்சிபுரம் மாவட்டம் செங்காடு கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் உரையாற்றும் முதல்வர் ஸ்டாலின்
காஞ்சிபுரம் மாவட்டம் செங்காடு கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் உரையாற்றும் முதல்வர் ஸ்டாலின்
கிராமசபை கூட்டத்தில் கலந்துகொண்ட மக்களிடம் சென்று உரையாடி மனுக்களைப் பெறுகிறர் முதல்வர்...
கிராமசபை கூட்டத்தில் கலந்துகொண்ட மக்களிடம் சென்று உரையாடி மனுக்களைப் பெறுகிறர் முதல்வர்...
குறைகளைப் பகிர்ந்துகொண்ட பெண்ணிடம் பரிவுடன் உரையாடும் முதல்வர் ஸ்டாலின்
குறைகளைப் பகிர்ந்துகொண்ட பெண்ணிடம் பரிவுடன் உரையாடும் முதல்வர் ஸ்டாலின்
சுய உதவிக் குழு கண்காட்சி அரங்கை முதல்வர் ஸ்டாலின் பார்வையிடுகிறார்...
சுய உதவிக் குழு கண்காட்சி அரங்கை முதல்வர் ஸ்டாலின் பார்வையிடுகிறார்...

Related Stories

No stories found.