தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்: புதிய அறிவிப்பு வெளியாகுமா?

தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்: புதிய அறிவிப்பு வெளியாகுமா?

தமிழக அரசின் 2022-23-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை சட்டப்பேரவையில் நாளை தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட்டில் பல்வேறு புதிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளது.

முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு தாக்கல் செய்யப்படும் 2வது பட்ஜெட் இதுவாகும். இந்த பட்ஜெட்டில், திமுக தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட பல்வேறு புதிய அறிவிப்புகள் மற்றும் திட்டங்களை அறிவிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. முக்கியமாக, தேர்தல் அறிக்கையில் கூறியபடி, சில நிபந்தனைகளுடன் மகளிருக்கான உரிமை தொகை மாதம் ரூ.1000 வழங்கப்படுவது குறித்த அறிவிப்பு நாளை தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் இடம்பெற வாய்ப்புள்ளது. இதனால், 2022-23ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்வது தமிழக மக்களிடம் குறிப்பாக பெண்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக அரசின் பட்ஜெட் நாளை தாக்கல் செய்ததை தொடர்ந்து வரும் 19-ம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. பின்னர் 21, 22, 23 ஆகிய மூன்று நாட்கள் பட்ஜெட் மீது விவாதம் நடத்தப்பட்டு, 24-ம் தேதி பட்ஜெட் விவாதத்துக்கு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதிலுரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடரை முடிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மீண்டும் ஏப்ரல் மாதம் தமிழக சட்டமன்றம் கூடி, மானிய கோரிக்கை மீதான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in