தமிழக பட்ஜெட் இன்று தாக்கல்: புதிய அறிவிப்புகள் இருக்குமா?

தமிழக பட்ஜெட் இன்று தாக்கல்: புதிய அறிவிப்புகள் இருக்குமா?

2022-2023-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 13-ம் தேதி இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், 2022-2023-ம் ஆண்டுக்கான பட்ஜெட் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட இருக்கிறது. காகிதம் இல்லா பட்ஜெட்டை காலை 10 மணிக்கு நிதிமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்கிறார். பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் இடம்பெற அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டு, இன்னும் நிறைவேற்றப்படாத திட்டங்கள் பட்ஜெட்டில் இடம்பெற உள்ளதாக தெரிகிறது.

முக்கியமாக, குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் திட்டம் இடம் பெறும் என்று கூறப்படுகிறது. இதேபோல், மேலும் பல அறிவிப்புகள் வெளியாகலாம் என்றும் தெரிகிறது. நாளை வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட அதிகம் வாய்ப்பு இருக்கிறது. இந்த வேளாண் பட்ஜெட்டை வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்.

வரும் 21-ம் தேதி முதல் பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கும் என தெரிகிறது. வரும் 24ம் தேதி பட்ஜெட் மீதான விவாதத்துக்கு பதில் அளித்து நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசுகிறார். துபாய், டெல்லி பயணத்தை முடிக்கும் முதல்வர் ஸ்டாலின், ஏப்ரல் 2-ம் தேதிக்கு சட்டப்பேரவை கூட்டம் மீண்டும் தொடங்கி, துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறும் என்று தெரிகிறது. இந்த விவாதம் ஒரு மாதத்திற்கு மேல் நடக்கும் என்று கூறப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in