மார்ச் 18ல் தமிழக பட்ஜெட்; நேரலையில் ஒளிபரப்பு

சபாநாயகர் அப்பாவு பேட்டி
சபாநாயகர் அப்பாவு
சபாநாயகர் அப்பாவு

தமிழக அரசின் 2022-23 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 18 ஆம் தேதி நடைபெறும் என்றும் பட்ஜெட் கூட்டத்தொடர் முழுவதும் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படு் என்றும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு, "வரும் 18 ஆம் தேதி காலை 10 மணியளவில் தலைமைச் செயலகத்தில் உள்ள பேரவை மன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெறும். அன்றைய தினம் தமிழக நிதியமைச்சர் தமிழ் நாட்டின் வரவு செலவு திட்டங்களை தாக்கல் செய்ய உள்ளார். கடந்த ஆண்டு போன்றே இந்தாண்டும் கணினி முறையில் காகிதம் அல்லாத பட்ஜெட்டாக வரவு செலவுத் திட்டத்தை நிதியமைச்சர் தாக்கல் செய்ய உள்ளார்.

அன்றைய தினம் மாலை அலுவல் ஆய்வு கூட்டம் கூடி எத்தனை நாட்கள் பட்ஜெட் தொடர்பான விவாதங்களை நடத்தலாம் என்று முடிவு எடுக்கப்படும். 2022-23 ஆம் ஆண்டுக்கான முன்பண மானிய கோரிக்கை வரும் 24ஆம் தேதி நடைபெறும். வரும் 24 ஆம் தேதியன்று 2021- 22 ஆம் ஆண்டுக்கான இறுதி துணை நிலை அறிக்கையையும் நிதி அமைச்சர் தாக்கல் செய்யவுள்ளார். மானியக் கோரிக்கை தொடர்ந்து நடைபெறுவது குறித்து அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும். வரவு செலவு திட்டங்கள் தொடர்பாக நிதியமைச்சர் தாக்கல் செய்யும் நிகழ்வு மற்றும் கேள்வி-பதில் நேரங்கள் அனைத்தும் நேரலையில் ஒளிபரப்பப்படும். கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பேரவைக் கூட்டம் நடைபெறும்" என தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in