நவீன தொழில் வளர்ச்சிக்கு ஏற்ப பாடத்திட்டம் மாற்றியமைப்பு

நவீன தொழில் வளர்ச்சிக்கு ஏற்ப பாடத்திட்டம் மாற்றியமைப்பு

உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி தகவல்

நவீன தொழில் வளர்ச்சிக்கு ஏற்ப அண்ணா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டம் மாற்றி வடிவமைக்கப்பட உள்ளதாகவும், அதற்காக 90 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி கூறினார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு ஏற்ப பொறியியல் படிப்புக்கான பாடத்திட்டம் மாற்றி அமைக்க திட்டமிட்டுள்ளோம் என்றும் குறிப்பாக 25 ஆண்டுகளுக்கு பிறகு அண்ணா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தை மாற்றி அமைக்க குழு அமைத்துள்ளோம் என்றும் கூறினார்.

மேலும், பாடத்திட்டத்தை மாற்றி அமைக்க பல்துறை பேராசிரியர்கள், தொழில் நிறுவன பிரதிநிதிகள், இந்திய ஆட்சி பணி அலுவலர்கள், முன்னாள் மாணவர்கள் என 90 பேர் கொண்ட குழு அமைக்கப்பட உள்ளது என்று தெரிவித்த அமைச்சர் பொன்முடி, சர்வதேச அளவிலான தொழில் நுட்பம், வேலை வாய்ப்பு, திறன் மேம்பாடு பிற உயர்கல்வி நிறுவ பாடத்திட்டம் ஆகியவற்றை ஆராய்ந்து அதற்கு ஏற்ப புதிய பாடத்திட்டம் உருவாக்கப்பட உள்ளது என்றார்.

தேசிய கல்வி கொள்கைக்கு பதில் மாநில கல்வி கொள்கையை உருவாக்கவும் புதிய குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் உக்ரைனில் இருந்து திரும்பியுள்ள மாணவர்கள், உயர்கல்வி படிக்க தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்யும் என்றும் அமைச்சர் கூறினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in