தென்மாவட்டங்களில் இருந்து பெங்களூரு செல்லும் தமிழர்களுக்கு இனிப்பான செய்தி!

கார்மேலறத்தில் இனி ரயில் நிற்கும்: ரயில்வே துறை அறிவிப்பு
தென்மாவட்டங்களில் இருந்து பெங்களூரு செல்லும் தமிழர்களுக்கு இனிப்பான செய்தி!
சென்ட்ரல் ரயில் நிலையம்

நாகர்கோவிலில் இருந்து பெங்களூரு செல்லும் ரயில் இனி கார்மேலறம் நிறுத்தத்திலும் நின்றுசெல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தென்மாவட்டங்களில் இருந்து கர்நாடகாவில் வசிக்கும் அதிகமான தமிழர்கள் கார்மேலறம் பகுதியில் இருப்பதால் இது அவர்களின் பயணத்திற்கு மிகவும் வசதியாக இருக்கும் என கூறப்படுகிறது.

நாகர்கோவிலில் இருந்து பெங்களூருக்கு தினசரி ரயில் 2014-ம் ஆண்டு முதல் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் பெங்களூருவில் இருந்து தினசரி மாலை 5 மணிக்கு புறப்பட்டு பெங்களூரு கன்டோன்மென்ட், ஓசூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், ராசிபுரம், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர் வழியாக நாகர்கோவிலுக்கு மறுநாள் காலை 7:40 மணிக்கு வந்தடைகிறது.

மறுமார்க்கமாக நாகர்கோவிலிருந்து தினசரி இரவு 7:10 மணிக்கு புறப்பட்டு பெங்களூருக்கு காலை 9:20 மணிக்கு போய் சேருகிறது. இந்த ரயில் தமிழகத்தில் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோவிலிருந்து புறப்பட்டு திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி என 11 மாவட்டங்கள் வழியாக பயணித்து பெங்களூரு செல்லும் வகையில் வகையில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் மட்டுமே தமிழகத்தில் உள்ள அதிக பகுதி பயணிகள் பயன்படும் படியாக பெங்களூருக்கு இயக்கப்படுவதாகும். ஆகையால் இந்த ரயிலுக்கு மற்ற ரயில்களைக் காட்டிலும் அதிக முக்கியத்துவம் கொடுத்து இயக்க வேண்டும் என்ற கோரிக்கை தென்மாவட்ட பயணிகளால் தொடர்ந்து முன்வைக்கப்படுகிறது.

இந்த ரயில் ஓசூருக்கு பிறகு பெங்களூரு கண்டோன்மென்டில் நின்று பின்னர் கடைசி நிலையமான பெங்களூருக்கு காலை 9.20 மணிக்கு சேருகிறது. பெங்களுருவில் உள்ள கார்மேலறம் ரயில் நிலையம் அருகில் சர்ஜாபூர் சாலை, சில்க் போர்டு, மாரத்தஹள்ளி ஆகியப் பகுதிகளைச் சுற்றிலும் தமிழர்கள் ஏராளமானோர் தங்கியுள்ளனர். இந்த பகுதியில் தங்கியுள்ள மக்களுக்கு கார்மேலறம் ரயில்வே நிறுத்தம் மிகவும் பயனுள்ளதாக அமையும். இந்த ஸ்டேஷனில் நிறுத்தம் இல்லாததாலும் மக்கள் தங்கள் வீட்டிற்கு செல்வதற்கு அதிக நேரத்தை வீணடிக்கிறார்கள். இதனால் அலுவலகத்தில் பணிபுரியும் பயணிகள் அரை நாள் விடுமுறை எடுக்க வேண்டியுள்ளது. இதனால் இந்த ரயிலை கார்மேலறம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

இதன் பலனாக இந்த ரயில் தற்போது கார்மேலறம் ரயில் நிலையத்தில் தற்காலிக நிறுத்தம் அனுமதிக்கப்பட்டு உள்ளது. இதன்படி புதுப்பிக்கப்பட்ட ரயில் கால அட்டவணையின் படி இந்த ரயில் நாகர்கோவிலிருந்து பெங்களூரு மார்க்கம் பயணிக்கும் போது ஓசூருக்கு காலை 7 மணிக்கும், கார்மேல்ரகத்துக்கு 7:30 மணிக்கும் போய் சேரும்வகையில் காலஅட்டவணை அமைக்கப்பட்டுள்ளது. இதை தென்மேற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதேநேரம் இதுதற்காலிக நிறுத்தம் என்பதால், இந்த கார்மேலறம் நிறுத்தத்தில் குறைவான அளவு பயணிகள் பயணம் செய்தால் இந்த நிறுத்தம் ரத்து செய்யப்பட்டு விடும் சூழலும் உள்ளது. இதனால் முன்பதிவு செய்து அதிக பயணிகள் பயணம் செய்தால் மட்டுமே இந்த தற்காலிக நிறுத்தம் நிரந்தர நிறுத்தமாக மாற்றப்பட வாய்ப்பு உள்ளது.

Related Stories

No stories found.