தீபாவளி பண்டிகை; தூத்துக்குடிக்கு அதிவிரைவு சிறப்பு ரயில் இயக்கம்!

தீபாவளி பண்டிகை;  தூத்துக்குடிக்கு அதிவிரைவு சிறப்பு ரயில் இயக்கம்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த சென்னை எழும்பூரில் இருந்து வரும் 10 மற்றும் 12 ஆகிய தேதிகளில் தூத்துக்குடிக்கு அதிவிரைவு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், பயணிகளின் நலனுக்காகவும் சென்னை எழும்பூர் - தூத்துக்குடி இடையே அதிவிரைவு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த அதிவிரைவு சிறப்பு ரயில் (வண்டி எண். 06001) 10 மற்றும் 12 ஆகிய தேதிகளில் இரவு 11.45 மணிக்கு எழும்பூரிலிருந்து புறப்பட்டு மறுநாள் மதியம் 12.30 மணிக்கு தூத்துக்குடி சென்றடையும்.

இதேபோல மறுமார்க்கமாக, அதிவிரைவு சிறப்பு ரயில் (06002) 11 மற்றும் 13 ஆகிய தேதிகளில் மாலை 3.30 மணிக்கு தூத்துக்குடியிலிருந்து புறப்பட்டு மறுநாள் காலை 4.45 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடையும்' என கூறப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in