
சென்னை விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் ரயில் சேவை 20 நிமிடங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் அவதியடைந்துள்ளனர்.
சென்னை விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறால் நீல வழித்தடத்தில் 20 நிமிட இடை வெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. நீல வழித்தடத்தில் விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் இன்று காலை 11.20 மணியளவில் மேல்நிலை மின்சார உபகரணங்களில் திடீர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து சுங்கச்சாவடி மெட்ரோ ரயில் நிலையம் வரை 9 நிமிட இடைவெளியில் இயக்கப்படும் மெட்ரோ ரயில்கள் 20 நிமிட இடைவெளியில் ஒரு வழிப் பாதையில் இயக்கப்பட்டு வருகிறது.
நீலவழித்தடத்தில் சுங்கச்சாவடி மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து ஏ.ஜி- டி.எம்.எஸ்., நந்தனம் வழியாக விமான நிலையம் வரை செல்லும் மெட்ரோ ரயில் சேவைகள் வழக்கம் போல் 9 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வருகிறது. விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் மேல்நிலை மின்சார உபகரணங்களில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை தொழில்நுட்ப வல்லுநர்கள் சரிசெய்யும் பணியில் துரிதமாக ஈடுபட்டுள்ளனர். தொழில்நுட்ப கோளாறு வெகுவிரைவில் சரிசெய்யப்பட்டு மெட்ரோ ரயில்கள் வழக்கம்போல் இயக்கப்படும்.
பச்சை வழித்தடத்தில் மெட்ரோ ரயில்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டு வருகிறது. மெட்ரோ ரயில் பயணிகளுக்கு ஏற்பட்ட இந்த எதிர்பாராத தடங்கல்களுக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வருந்துகிறது என மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
HBD AMBIKA| ‘முதல் மரியாதை’ மீது அம்பிகாவுக்கு வந்த பொறாமை!
தீபாவளி கொண்டாட்டம்... 16,895 பேருந்துகள் இயக்கம்... எந்தெந்த ஊர்களுக்கு எங்கிருந்து? முழு விபரம்!
அதிர்ச்சி... பெண் அதிகாரி கழுத்தறுத்து கொலை! மர்ம கும்பல் வெறிச்செயல்
பிரபல ரவுடி வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு! உயிர் தப்பிய குடும்பம்