`நீங்க எங்க அப்பா மாதிரி அங்கிள்'- முதல்வரை நெகிழ வைத்த மாணவிகள் (வீடியோ)

`நீங்க எங்க அப்பா மாதிரி அங்கிள்'- முதல்வரை நெகிழ வைத்த மாணவிகள் (வீடியோ)

``நீங்க எங்க அப்பா மாதிரி. அதனால்தான் உங்ககிட்ட கேட்கிறோம்" என்று மாணவிகள் கூறியதை கேட்டு நெகிழ்ந்து போனார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி நரிக்குறவர் காலனியில் வசித்து வருகிறார்கள் மாணவிகள் திவ்யா, ப்ரியா, தர்ஷினி. இந்த மூன்று மாணவிகள் சேர்ந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், ஒருவருக்கொருவர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பேசிக்கொள்கின்றனர். இதில் மாணவி ஒருவர், எங்க சமுதாயத்தில் நிறைய பிரச்சினைகள் இருக்கிறது. எங்க மு.க.ஸ்டாலின் அங்கிள் வந்தால் மாறும்" என்று கூறுகிறார்.

இந்த மாணவிகளை தலைமைச் செயலகத்திற்கு அழைத்த முதல்வர் ஸ்டாலின் அவர்களிடம் பேசினார். அப்போது, மாணவி ஒருவர், நீங்க எங்க அப்பா மாதிரி. அதனால்தான் உங்ககிட்ட கேட்கிறோம்" என்று கூறியது முதல்வரை நெகிழ வைத்தது. அருகில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இருந்தார்.

இந்நிலையில், மாணவிகள் பேசும் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், "தன்னம்பிக்கை எதிரொலிக்கும் சகோதரி திவ்யாவின் பேச்சு எனக்குள் எதிரொலித்துக்கொண்டே இருக்கிறது! திவ்யா, ப்ரியா, தர்ஷினி என நமது தகுதியும் திறமையும் யாருக்கும் சளைத்ததல்ல! நாம் முன்னேறி வருகிறோம்; தடைக்கற்களை உடைத்து திராவிட மாடலில் நாம் செதுக்கும் சிற்பங்கள் உயர்ந்து விளங்கும்!" என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in