காதலில் மாணவிகள் கவனம் செலுத்தாதீங்க! திருப்பத்தூர் ஆட்சியர் அறிவுரை

மாணவிகளுக்கு ஆட்சியர் அறிவுரை
மாணவிகளுக்கு ஆட்சியர் அறிவுரை

படிக்கும் வயதில் காதல் போன்ற விஷயங்களில் மாணவிகள் கவனம் செலுத்தாமல் படிப்பில் கவனமாக இருக்கும்படி கல்லூரி மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுரை வழங்கினார்.

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன்
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன்

திருப்பத்தூர் மாவட்டம், கந்தலியில் பழங்குடியின மாணவிகளுக்கான விடுதியை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் இன்று திறந்து வைத்து அதன் கட்டமைப்புகளை ஆய்வு செய்தார். பின்னர் கல்லூரி மாணவிகளிடம் பேசிய ஆட்சியர், காதல் போன்ற விஷயங்களில் கவனம் செலுத்தினால் வாழ்க்கை திசை மாறிப் போகும் என்று கூறினார்.

மாணவிகளுக்கு ஆட்சியர் அறிவுரை
மாணவிகளுக்கு ஆட்சியர் அறிவுரை

மாணவிகளுக்கு விடுதியில் நூலகம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட ஆட்சியர், மாணவிகள் அதை பயன்படுத்தி அரசு வேலைக்கான தேர்வுகளை எழுதி வெற்றி பெற வேண்டும் என்று கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in