சித்த மருத்துவ மேற்படிப்பிற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

சென்னை அரசு சித்த மருத்துவக் கல்லூரி
சென்னை அரசு சித்த மருத்துவக் கல்லூரி

அரசு சித்த மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்டி சித்த மருத்துவ பட்டம் மேற்படிப்பிற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என ஓமியோபதித்துறை ஆணையரகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து ஓமியோபதித்துறை ஆணையரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ”2023-2024ம் கல்வி ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள அரசு சித்தா மருத்துவக் கல்லூரிகளில், சென்னை மற்றும் பாளையங்கோட்டையில் உள்ள இடங்களுக்கு எம்டி மருத்துவ பட்டம் மேற்படிப்பிற்கான சேர்க்கை பெற அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள், 2023ம் ஆண்டிற்கான சித்தா மருத்துவ பட்ட படிப்பிற்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு எழுதி தேவையான தகுதி சதமான மதிப்பெண் பெற்றவர்களிடம் இருந்து வரவேற்கப்படுகின்றன. விண்ணப்ப படிவம் மற்றும் தகவல் தொகுப்பேட்டினை www.tnhealth.tn.gov.in என்ற சுகாதாரத் துறையின் வலைதள முகவரி மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்கள் இவ்வாணையரகத்திலோ, தேர்வு குழு அலுவலகத்திலோ, வழங்கப்பட மாட்டாது.

பாளையங்கோட்டை சித்த மருத்துவ கல்லூரி
பாளையங்கோட்டை சித்த மருத்துவ கல்லூரி

மேலும் அடிப்படைத் தகுதி, தரவரிசை, கலந்தாய்வு அட்டவணை மற்றும் பிற விவரங்களுக்கு www.tnhealth.tn.gov.in என்ற வலைதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம். விண்ணப்ப படிவம் மற்றும் தகவல் தொகுப்பேட்டினை இன்று முதல் வரும் 20ம் தேதி முடிய மாலை 5 மணி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவம் தபால், கூரியர் சேவை, மூலமாக பெறவோ அல்லது நேரில் சமர்ப்பிக்கவோ கடைசி நாள் வரும் 20ம் தேதி மாலை 5 30 மணி வரை ஆகும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in