மாணவர்கள் பள்ளிக்கு வருவது கட்டாயம் கிடையாது!- தமிழக அரசு

பள்ளி மாணவிகள்
பள்ளி மாணவிகள்hindu கோப்பு படம்

“தமிழகத்தில் பிப்ரவரி 1-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டாலும் மாணவர்கள் பள்ளிக்கு வருவது கட்டாயம் கிடையாது” என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கரோனா பரவல் அதிகரித்தது. இதையடுத்து, பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டன. இந்நிலையில், கரோனா தொற்று பரவல் தினசரி பாதிப்பு 25 ஆயிரமாக குறைந்தது. இதைத் தொடர்ந்து, பிப்ரவரி 1-ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

அதே நேரத்தில், கல்லூரித் தேர்வு ஆன்லைன் மூலம் நடைபெறும் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அண்மையில் அறிவித்தார். கரோனா பல வகையில் உருமாறி வரும் நிலையில், மாணவர்களை பள்ளிக்கூடத்துக்கு அனுப்ப பெற்றோர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில், பள்ளிகள் திறக்கப்பட்டாலும் மாணவர்கள் பள்ளிக்கு வருவது கட்டாயம் கிடையாது என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழகத்தில் பிப்ரவரி 1-ம் தேதி முதல் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படுகிறது. ஆனால் கரோனா குறித்து அச்சம் இருப்பதால், மாணவர்கள் பள்ளிக்கு வருவது கட்டாயம் கிடையாது. பள்ளி வகுப்புகள் நேரடி அல்லது ஆன்லைன் முறையில் நடத்தப்படும். எந்த முறையில் வகுப்புகளை நடத்துவது என்பதை அந்தந்த பள்ளிகளே முடிவு செய்யலாம். நேரடி வகுப்புகளுக்கு வரும் மாணவர்கள் கட்டாயம் கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுவதை பள்ளி நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in