தமிழக- அமீரக உறவைப் போல வலுவான சந்திப்பு: முதல்வர் ஸ்டாலின்

தமிழக- அமீரக உறவைப் போல வலுவான சந்திப்பு: முதல்வர் ஸ்டாலின்

``தமிழக- அமீரக உறவைப் போல வலுவானதாகச் சந்திப்பு அமைந்தது" என்று முதல்வர மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

நான்கு பயணமாக துபாய் செய்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று ஐக்கிய அரபு அமீரக அமைச்சர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார். அப்போது, தமிழகத்தில் புதிய தொழில் நிறுவனங்களை தொடங்குவது மற்றும் தொழில் வளர்ச்சியை பெருக்க புதிய ஒப்பந்தங்களை மேற்கொள்வது உள்ளிட்டவை குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது.

இந்த சந்திப்பு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், " 'நம்பர் 1 தமிழ்நாடு' என்ற நிலையை அடைய அமீரகப் பயணம் பயனுள்ளதாக அமையும் என்ற நம்பிக்கை ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதாரத் துறை அமைச்சர் மற்றும் அயலக வர்த்தகத் துறையின் இணை அமைச்சருடனான சந்திப்பில் வலுப்பெற்றது. தமிழக- அமீரக உறவைப் போல வலுவானதாகச் சந்திப்பு அமைந்தது" என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in