வீரர்களின் உடையில் தலைவர்களின் படங்கள் இருக்கக்கூடாது: கபடி போட்டி நடத்த அதிரடி நிபந்தனைகள்!

மதுரை உயர் நீதிமன்றம்
மதுரை உயர் நீதிமன்றம்

கபடி போட்டிகள் நடத்த பல்வேறு நிபந்தனைகளை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

நெல்லை மாவட்டம் விஜயநாராயணபுரத்தில் மாலை நேர கபடி போட்டி நடத்த அனுமதிக் கோரி தாசன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி சதிகுமார சுகுமார குருப் பிறப்பித்த உத்தரவில், “கபடி போட்டியில் பங்கேற்கும் வீரர்களின் உடைகளில் அரசியல் கட்சியின் சின்னங்கள் அல்லது அரசியல் தலைவர்களின் படங்கள், ஜாதி ரீதியான அடையாளங்களோ இருக்கக் கூடாது. போட்டி நடைபெறும் இடத்தில் அரசியல் கட்சிகள் மற்றும் ஜாதியை கட்சிகளின் புகைப்படங்களோ, பிளக்ஸ் பேனர்களோ, இருக்க கூடாது. அரசியல் மற்றும்
ஜாதியை ரீதியான பாடல்கள் ஒளிபரப்பக் கூடாது. கபடி விளையாட்டு நடைபெறும் இடத்தில் ஒன்று அல்லது இரண்டு மருத்துவர்கள் கொண்ட மருத்துவக் குழு இருக்க வேண்டும். அனைத்து முதலுதவிக்கான சிகிச்சைகள் உபகரணங்களும் இருக்க வேண்டும்.

விளையாட்டு போட்டி நடைபெறும் இடத்தில் தேவையான வசதிகளை செய்து கொடுத்திருக்க வேண்டும்.
போட்டியில் பங்கேற்பவர்கள் எந்தவிதமான போதை பொருட்களோ, மதுவோ உட்கொண்டிருக்க கூடாது.இந்த நிபந்தனைகள் அடிப்படையில் கபடி போட்டிக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இந்த நிபந்தனைகளை மீறும் வகையில் போட்டி நடந்தால் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மீது நடவடிக்கை எடுத்து போட்டியை நிறுத்தலாம்”இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in