நியூட்ரினோ திட்டத்தை கைவிட பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்

நியூட்ரினோ திட்டத்தை கைவிட பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்

தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டம், பொட்டிபுரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில், நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. இதற்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அத்துடன் அப்பகுதி மக்கள், பல்வேறு கட்சியினர், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அண்மையில், 'மத்திய அரசின் நியூட்ரினோ திட்டத்திற்கு அனுமதி அளிக்க முடியாது' என உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரத்தை தமிழக அரசு தாக்கல் செய்திருந்தது. இந்நிலையில், பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கடிதம் எழுதியுள்ளார். அதில், ``நியூட்ரினோ திட்டத்தை நிறைவேற்றினால் தேனி மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள வனவிலங்குகளுக்கு ஆபத்து ஏற்படும். விவசாயம் பாதிக்கப்படும் . எனவே, நியூட்ரினோ திட்டம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும்' என்று வலியுறுத்தியுள்ளார்.

சுந்தர்ராஜன்
சுந்தர்ராஜன்

தமிழக முதல்வரின் கடிதம் குறித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜனிடம் கேட்டபோது, ``நியூட்ரினோ ஆய்வு மையத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஏற்கெனவே தமிழக அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. பிரதமர் மோடிக்கு, முதல்வரான பிறகு ஸ்டாலின் எழுதியுள்ள முதல் கடிதம் இது. ஏற்கெனவே, திமுக தேர்தல் அறிக்கையில், நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க அனுமதிக்க மாட்டோம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் இத்தொடர் நடவடிக்கைகளுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்'' என்று கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in