ஈரோட்டில் மு.க.ஸ்டாலின்... காய்கறி வாங்க வந்தவர்களிடம் வாக்கு சேகரிப்பு

ஈரோட்டில் முதல்வர் ஸ்டாலின்
ஈரோட்டில் முதல்வர் ஸ்டாலின்

ஈரோடு சம்பத் நகர் உழவர் சந்தையில் காய்கறிகள் வாங்க வந்தவர்களிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை, திமுக வேட்பாளர் பிரகாசுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.

நடைப்பயிற்சியின் போது வாக்கு சேகரித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்
நடைப்பயிற்சியின் போது வாக்கு சேகரித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்

திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

நேற்று சேலத்தில் திமுக வேட்பாளர் செல்வகணபதிக்கு ஆதரவாக முதல்வர் ஸ்டாலின் வாக்குகள் சேகரித்தார். இந்நிலையில் இன்று ஈரோட்டில் திமுக வேட்பாளர் பிரகாசுக்கு ஆதரவாக முதல்வர் வாக்கு சேகரித்தார். இன்று காலை ஈரோட்டில் உள்ள சின்னியாம்பாளையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நடைப் பயிற்சி மேற்கொண்டார்.

ஈரோடு உழவர் சந்தையில் வாக்கு சேகரித்த முதல்வர் ஸ்டாலின்
ஈரோடு உழவர் சந்தையில் வாக்கு சேகரித்த முதல்வர் ஸ்டாலின்

அப்போது சம்பத் நகர் மற்றும் அங்குள்ள உழவர் சந்தையில் நடந்து சென்று வியாபாரிகள், பொதுமக்களிடம் ஈரோடு மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் பிரகாசை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.

மேலும் பொதுமக்களின் குறைகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். இன்று மாலை சோலார் பகுதியில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் ஈரோடு, கரூர், நாமக்கல் மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடும் திமுக, காங்கிரஸ் (ஜோதிமணி), கொமதேக (மாதேஸ்வரன்) வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in