நள்ளிரவில் கைக் குழந்தைகளுடன் வந்த இலங்கை தமிழ் பெண்... கண்கலங்க வைத்த சோகம்

நள்ளிரவில் கைக் குழந்தைகளுடன் வந்த இலங்கை தமிழ் பெண்... கண்கலங்க வைத்த சோகம்

இலங்கையிலிருந்து மூன்று குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் நள்ளிரவில் தனுஷ்கோடி வந்துள்ளனர். பெண் ஒருவர் தனது இரண்டு கைக்குழந்தைகளுடன் வந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடுமையான பொருளாதார நெருக்கடியால் இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் எகிறி வருகிறது. இதனால் ஏழை, நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் வாழ்வதற்கு வழியின்றி வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். ஒருவேளை உணவிற்கே திண்டாடும் நிலைமைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். அதிபருக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்து வரும் நிலையில், பதவி விலக மாட்டேன் என்று அடம் பிடித்து வருகிறார் கோத்தபய ராஜபக்ச.

அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வருவதால், இனி இலங்கையில் வாழவே முடியாத சூழ்நிலைக்கு ஏழை, நடுத்தர மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். பட்டினியால் உயிரிழப்பதைவிட நமது தொப்புள் கொடி உறவான தமிழகத்திற்கே சென்றுவிடலாம் என்று அங்குள்ள தமிழர்கள் படையெடுக்க ஆரம்பித்துவிட்டனர்.

கடந்த மார்ச் மாதம் 22-ம் தேதியிலிருந்து இலங்கையில் வாழ வழியின்றி அகதிகளாக தமிழகத்திற்கு ஈழத்தமிழர்கள் வரத்தொடங்கினர். 11 குடும்பத்தை சேர்ந்த 42 பேர் மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று நள்ளிரவு 2 படகில் கைக்குழந்தையுடன் வந்த மூன்று குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் ஆபத்தான முறையில் கடல் கடந்து தனுஷ்கோடி பகுதியில் அகதிகளாக தஞ்சமடைந்தனர். அவர்களிடம் கடலோர காவல் துறையினர் மற்றும் கியூ பிராஞ்ச் காவ்லதுறையினர் விசாரணை நடத்தினர். மண்டபம் கடலோர காவல் குழுமம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர்கள் விசாரணைக்கு பின்னர் அகதிகள் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு தேவையான உதவிகளை தமிழக அரசு அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in