‘எந்த ஒரு நாடும் செய்யாத உதவியை தமிழ்நாடு முதல்வர் செய்து இருக்கிறார்’ : இலங்கை பிரதமர் ரணில் மனம் திறந்த பாராட்டு!

‘எந்த ஒரு நாடும் செய்யாத உதவியை தமிழ்நாடு முதல்வர் செய்து இருக்கிறார்’ :  இலங்கை பிரதமர் ரணில் மனம் திறந்த பாராட்டு!

இலங்கையின் நிலையை உணர்ந்து எந்த நாடும் முன் வராத நிலையில், தமிழ்நாடு அரசு உதவி செய்ததற்கு இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, தன்னை தொடர்பு கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்ததாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை ஜாபர்கான்பேட்டையில் திமுக சார்பில் ஒராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், “ இன்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே என்னை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி சொன்னேன் என்று சொல்லுங்கள் எனக் கேட்டுக்கொண்டார். உலகிலேயே முதல்முறையாக எங்களுக்கு உதவி செய்திருக்கிறார்கள். எந்த ஒரு நாடும் செய்யாத ஒரு உதவியை தமிழக முதல்வர் செய்து இருக்கிறார். அதற்கு நாங்களும், இலங்கை மக்களும் நன்றி கூறுகிறோம்” என்று தன்னிடம் கூறியதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். இக்கூட்டத்தில் சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ் குமார் , தமிழ்நாடு அரசு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் லியோனி கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in