
நாகர்கோவில் மற்றும் தாம்பரம் இடையே தீபாவளி சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சிறப்பு ரயில்களுக்கு நவம்பர் 2ம் தேதி காலை 8 மணிக்கு முன்பதிவு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "நாகர்கோவில் தாம்பரம் இடையேயும், தாம்பரம் நாகர்கோவில் இடையேயும் தலா நான்கு முறை சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்திற்கு சிறப்பு ரயில்கள் நவம்பர் 5, 12, 19, 26 தேதிகளில் இயக்கப்பட உள்ளது. இதேபோல் தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்கள் நவ 6,13, 20, 27 தேதிகளில் இயக்கப்பட உள்ளது.
இந்த ரயில் நாகர்கோவிலில் இருந்து ஞாயிறு அன்று மாலை 4.35 மணிக்கு புறப்பட்டு, வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பாட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு தாம்பரம் ஆகிய இடங்களில் நின்று செல்லும். இறுதியாக தாம்பரத்திற்கு அதிகாலை 4.10 மணிக்கு வந்து சேரும்.
இதேபோல் திங்கள்கிழமைகளில் தாம்பரத்தில் இருந்து காலை 8 மணிக்கு புறப்படும் நாகர்கோவில் சிறப்பு ரயில், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர், நாகர்கோவில் ஆகிய இடங்களில் நின்று செல்லும். இறுதியாக நாகர்கோவிலுக்கு இரவு 8.45 மணிக்கு சென்றடையும். நாகர்கோவில்- தாம்பரம் இடையே தீபாவளி சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு நவம்பர் 2ம் தேதியான நாளை காலை 8 மணிக்கு முன்பதிவு தொடங்குகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
முற்றுகிறது மோதல்... பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக பொன்முடி அறிவிப்பு!
வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு: முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!
பட்டத்து இளவரசியாக முடிசூடினார் 18 வயது லியோனார்!
தீபாவளிக்கு தெறிக்கப் போகுது... மதுப் பிரியர்கள் உற்சாகம்; நவ.10 முதல் புதிய ‘பீர்’ வகைகள் அறிமுகம்!