தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு நாகர்கோவில்- தாம்பரம் இடையே சிறப்பு ரயில்

தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு நாகர்கோவில்- தாம்பரம் இடையே சிறப்பு ரயில்
நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையம்

தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு தொடர் விடுமுறையால் சொந்த ஊருக்கு வரவும், மீண்டும் புறப்பட்டு செல்லவும் ஏதுவாக நாகர்கோவில்- தாம்பரம் இடையே சிறப்பு ரயில் சேவை இயக்கப்பட உள்ளது.

தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு வரும் 13-ம் தேதி தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு அதிவிரைவு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. (06005) இந்த ரயிலானது தாம்பரத்தில் இருந்து இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு, காலை 10.55 மணிக்கு நாகர்கோவிலை வந்தடையும். இந்த ரயில் காலை 5.35 மணிக்கு மதுரைக்கு வரும். மறுமார்க்கத்தில் நாகர்கோவில்- தாம்பரம் அதிவிரைவு சிறப்பு ரயில் (06006) 17-ம் தேதி மாலை 4.15 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்படும். இந்த ரயில் மதுரைக்கு இரவு 9 மணிக்கு வரும். 9.05 மணிக்கு மதுரையில் இருந்து புறப்படும் இந்த ரயில், அதிகாலை 4.10 மணிக்கு தாம்பரத்தை சென்றடையும்.

நாகர்கோவிலில் இருந்து கிளம்பும் இந்த ரயில் நெல்லை, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய இடங்களில் நின்றுசெல்லும். இந்த ரயிலில் 13 இரண்டாம் படுக்கை வசதி கொண்ட பெட்டிகள், 2 அடுக்கு குளிர்சாதன பெட்டி ஒன்றும், மூன்றடுக்கு குளிர்சாதனப் பெட்டி இரண்டும், 4 பொதுப்பெட்டிகள், மாற்றுத்திறனாளிகள் பெட்டி ஆகியவையும் இருக்கும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.