பயணிகளுக்கு குட்நியூஸ்... வருகிறது புறநகர் ரயிலில் ஏசி பெட்டி! தெற்கு ரயில்வே அசத்தல்!

சென்னை புறநகர் ரயில்
சென்னை புறநகர் ரயில்

சென்னையின் போக்குவரத்து நெரிசலை குறைப்பதில் புறநகர் ரயில் சேவை முக்கிய பங்குவகிக்கிறது. மேலும், ரயிலில் பயணிப்போரின் வசதியையும், பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு பல்வேறு மாற்றங்களையும் ரயில்வே துறை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில், ரயில்வே நிர்வாகம் மேலும் ஒரு புதிய வசதியை பொதுமக்களுக்காக செய்து தர போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

தெற்கு ரயில்வே சார்பில் சென்னை ரயில்வே கோட்டத்தில் தினமும் சுமார் 630 மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த மின்சார ரயிலில் பெண்களுக்கு பிரதயேக பெட்டிகள், முதல் வகுப்பு பெட்டிகள் உள்ளது போலவே, ஏசி பெட்டிகளையும் இணைத்து இயக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாகவே, பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

அதன்படியே, மின்சார ரயில்களில் குளிர்சாதன பெட்டிகளை இணைத்து சோதனை முறையில் இயக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. பெரம்பூரில் உள்ள ஐசிஎப்பில் தொழிற்சாலையில், இந்த பெட்டிகளின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் இந்த ஏசி பெட்டிகள் கொண்ட மின்சார ரயிலை இயக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அடுத்த 6 மாதங்களில் இதற்கான சோதனை ஓட்டம் துவங்கும் என கூறப்படுகிறது.

சென்னை புறநகர் ரயில்
சென்னை புறநகர் ரயில்

புறநகர் ரயில் சேவையை பொறுத்தவரை முதல் வகுப்பில் குறைந்தபட்சம் 50 ரூபாய் வரை கட்டணம் உள்ளதால், ஏசி கட்டணம் அதற்கு ஏற்ற வகையில் அதிகமாகவே இருக்கும் என தெரிகிறது. இந்நிலையில், இன்னொரு தகவலும் வெளியாகி உள்ளது. அதன்படி, விரைவு மற்றும் மின்சார ரயில் பெட்டிகளில், வெளிப்பகுதியில் உள்ளதை போலவே, உட்பகுதியிலும் விளம்பரங்கள் செய்து, வருவாயை பெருக்க திட்டமிடப்பட்டுள்ளது. கட்டண உயர்வு மட்டுமல்லாமல், இதர வழிகளிலும், வருமானத்தை அதிகரிக்க ரயில்வே முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது.

ஏற்கெனவே பல்வேறு வகையில் விளம்பரங்கள் மூலம் நிர்வாகம் வருமானம் ஈட்டி வரும் நிலையில், ரயில்களின் பெட்டிகளின் உட்பகுதியில் காலியாக உள்ள இடங்களில், விளம்பரங்களும் செய்ய திட்டமிட்டுள்ளது. அதிலும், நீண்ட காலத்துக்கு விளம்பரம் செய்வோருக்கு, கட்டண சலுகையும் அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான பேச்சுவார்த்தைகளும் நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த வகையில் விளம்பரங்களை செய்யும்பட்சத்தில், ரயில்வேக்கு கணிசமாக வருவாய் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் வாசிக்கலாமே...

இன்று உலக கருணை தினம்... வெறுப்பு கரையட்டும்; கருணை பொங்கட்டும்!

ஈரோட்டில் அதிர்ச்சி! அதிகாலையில் கோர விபத்து... 3 பேர் உயிரிழப்பு!

பெரும் சோகம்... பட்டாசு வெடித்து சிதறியதில் 4 வயது சிறுமி உயிரிழிப்பு!

திருச்செந்தூரில் சஷ்டி விழா தொடங்கியது... 18ம் தேதி சூரசம்ஹாரம்!

300 டன் பட்டாசு குப்பை சேகரிப்பு... விடிய விடிய பணியாற்றிய 19,600 தூய்மைப் பணியாளர்கள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in