தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க்: 17 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க்: 17 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

17 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு.

மத்திய அரசு பணியிலிருந்து திரும்பிய அஸ்ரா கார்க் தென்மண்டல ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மதுரை மாநகர காவல்துறை ஆணையராக இருந்த பிரேம் ஆனந்த் சின்ஹா வடக்கு மண்டல ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை மாநகர காவல்துறை ஆணையராக டி.செந்தில்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

தென்மண்டல ஐஜியாக இருந்த அன்பு, சென்னை வடக்கு கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நெல்லை மாநகர காவல்துறை ஆணையராக இருந்த துரைக்குமார் மாற்றப்பட்டு சந்தோஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

மதுவிலக்கு மற்றும் அமலாக்கத்துறை ஐஜி துரைக்குமார் பதவி உயர்வு பெற்று ரயில்வே காவல்துறை ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

காவல்துறை விரிவாக்கப்பிரிவு ஐஜியாக மல்லிகாவும், காவல்துறை நலன்பிரிவு ஐஜியாக சம்பத்குமாரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

காவல்துறை செயலாக்கப்பிரிவு ஏடிஜிபியாக பாலநாகதேவியும், ஊர்க்காவல் படை ஏடிஜிபியாக ஜெயராமும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஐஜி அபின் தினேஷ் மொடக் ஏடிஜிபியாக பதவி உயர்வு பெற்று பொருளாதார குற்றப்பிரிவு ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐஜி செந்தாமரைக்கண்ணன் பதவி உயர்வு பெற்று சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவு ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐஜி சஞ்சய் குமார் பதவி உயர்வு பெற்று காவல்துறை நவீனமயமாக்கல் பிரிவு ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐஜி சுமித் சரண் ஏடிஜிபியாக பதவி உயர்வு பெற்று மத்திய அரசு பணிக்கு மாற்றப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in