சொரத்தூர் ராஜேந்திரனுக்கு புதிய பதவி!

எடப்பாடி பழனிசாமிக்கு பூங்கொத்து கொடுத்து நன்றி
பழனிசாமிக்கு பூங்கொத்து அளிக்கும் ராஜேந்திரன்
பழனிசாமிக்கு பூங்கொத்து அளிக்கும் ராஜேந்திரன்

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியை, கடலூர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள அதிமுக அமைப்புச் செயலாளர் சொரத்தூர் இரா.ராஜேந்திரன் நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

அதிமுகவில் கடலூர் மத்திய மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு வடக்கு மாவட்டத்துக்கு முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத்தும், தெற்கு மாவட்டத்துக்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சொரத்தூர் ராஜேந்திரனும் மாவட்ட செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து 26-ம் தேதி எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்த சொரத்தூர் ராஜேந்திரன், அவருக்கு நன்றி தெரிவித்ததுடன் பூங்கொத்து கொடுத்து வாழ்த்துப் பெற்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in