மதி சந்தை, மதி திணை உணவகம்... புதிதாக 10,000 சுய உதவி குழுக்கள்... முதல்வரின் அசத்தலான அறிவிப்பு!

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

மகளிர் சுய உதவி குழுக்களின் மேம்பாட்டிற்காக ஆட்சியர் அலுவலகங்களில் மகளிர் சுய உதவி குழுக்களால் நடத்தப்படும் மதி திணை உணவகம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

மாவட்டங்கள் அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு, கண்காணிப்பு குழுவின் 3-வது கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று நடந்தது. இதில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் மேம்பாடு குறித்து முதல்வர் ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி பல்வேறு திட்டங்களையும் அறிவித்தார்.

'சுயஉதவிகுழுக்களின் தயாரிப்புகளை விற்க, ‘மதி சந்தை’ என்ற இணையவழி விற்பனை தளம் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

குழுக்களின் உற்பத்தி பொருட்களை அவர்களுக்குள்ளும், பிற பெரும் வணிக நிறுவனங்கள் மூலமாகவும் விற்க, மாநில, மாவட்ட அளவில் வாங்குவோர் - விற்போர் சந்திப்பு நடத்தப்படும். இதுதவிர, உற்பத்தி பொருட்களை காட்சிப்படுத்தவும், விற்கவும் முக்கிய சுற்றுலா தலங்களில் ‘மதி அங்காடிகள்’ நிறுவப்படும். 

பொருட்களை விற்பனை செய்ய ஏதுவாக ‘மதி எக்ஸ்பிரஸ் வாகனங்கள்’ வழங்கப்பட உள்ளன. சுயஉதவி குழுக்களால் இயக்கப்படும் ‘மதி திணை உணவகங்கள்’, மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் அமைக்கப்பட உள்ளன.

முதல்வரின் காலை உணவு திட்டம் விரிவாக்கப்பட்டு, மகளிர் மேம்பாட்டு நிறுவன சுயஉதவி குழு உறுப்பினர்கள் பங்கேற்பு மூலம், தமிழகத்தின் அனைத்து கிராம ஊராட்சிகள், பேரூராட்சிகளில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் செயல்படுத்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழகத்தில் மேலும் 10,000 மகளிர் சுய உதவி குழுக்கள் துவங்கப்படும் என்று முதல்வர் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in