தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து விற்பனை!

தங்கம் விலை சரிவு
தங்கம் விலை சரிவு

இன்றைய காலை நேர வர்த்தக நேரத்தில் தங்கத்தின் விலை கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஆபரண தங்கம் 54 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கடந்த மார்ச் ஒன்றாம் தேதி முதல் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், பல்வேறு புதிய உச்சங்களை தொட்டுள்ளது. நேற்றைய தினம் நாடு முழுவதும் அட்சய திருதியை தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஏராளமான பொதுமக்கள் தங்கம், வெள்ளி நகைகளை வாங்க கடைகளில் குவிந்தனர். இதனால் ஒரே நாளில் தங்கத்தின் விலை கிராமிற்கு 155 ரூபாயும், சவரனுக்கு 1,240 ரூபாயும் அதிகரித்து இருந்தது.

இதனால் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் சென்னையில் 54 ஆயிரத்து 160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இன்று வர்த்தகம் துவங்கிய போது தங்கத்தின் மீதான முதலீடுகள் கணிசமாக குறைந்தது. இதன் காரணமாக ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 20 ரூபாய் குறைந்து 6,750 விற்பனை செய்யப்பட்டது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 54 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி
வெள்ளி

வெள்ளியின் விலையும் இன்று கிராமருக்கு 70 பைசா குறைந்துள்ளது. நேற்று 91 ரூபாய் 20 பைசாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் வெள்ளி, இன்று 90 ரூபாய் 50 பைசாவிற்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிலோ பார்வெள்ளி 90,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in