தொடரும் இலங்கை கடற்படையின் அட்டூழியம்: ராமேஸ்வரம் மீனவர்கள் ஆறு பேர் சிறைப்பிடிப்பு

தொடரும் இலங்கை கடற்படையின் அட்டூழியம்: ராமேஸ்வரம் மீனவர்கள் ஆறு பேர் சிறைப்பிடிப்பு

எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் ஆறு பேரை இலங்கை கடற்படையினர் நேற்று நள்ளிரவில் கைது செய்துள்ளது தமிழக மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமேஸ்வரம் துறைமுகத்திலிருந்து நேற்று காலை நூற்றுக்கணக்கான படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றனர். அவர்கள் நேற்று இரவு தனுஷ்கோடிக்கு அருகே இந்திய கடற்பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி வந்ததாகக் கூறி அவர்களை படகுடன் கைது செய்து இலங்கைக்கு அழைத்துச் சென்றனர்.

தலைமன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் கடற்படை அதிகாரிகளின் விசாரணைக்குப் பிறகு மீன்வளத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுகின்றனர். விசாரணைக்குப் பிறகு காவல் துறையில் ஒப்படைக்கப்பட்டு மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் எனத் தெரிகிறது.

காரைக்கால் - நாகப்பட்டினம் பகுதி மீனவர்கள் 15 பேரை ஒரு வாரத்துக்கு முன்னர் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள நிலையில் தற்போது ராமேஸ்வரம் மீனவர்கள் ஆறு பேரை அவர்கள் கைது செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in