பட்டாசு தொழிற்சாலைகள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம்... 10,000 பேர் வேலையிழப்பு; ரூ.1000 கோடி உற்பத்தி பாதிப்பு

சிறு பட்டாசு ஆலைகள் வேலைநிறுத்தம்
சிறு பட்டாசு ஆலைகள் வேலைநிறுத்தம்
Updated on
2 min read

சிறு பட்டாசு ஆலைகளில் அதிகாரிகள் ஆய்வு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிவகாசி சுற்றுவட்டார பகுதிகளில் 150-க்கும் மேற்பட்ட சிறு பட்டாசு ஆலைகள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை துவங்கி உள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி, வெம்பக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. பல்லாயிரம் கோடி ரூபாய் அளவிற்கு பட்டாசு ஆலைகள் மூலமாக மத்திய, மாநில அரசுகளுக்கு அந்நிய செலாவணி கிடைத்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதி உச்ச நீதிமன்றம் பேரியம் நைட்ரேட் என்ற பச்சை உப்பு பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட்டது. இதையடுத்து மாவட்ட அதிகாரிகள் மற்றும் வெடி பொருட்கள் பிரிவு அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி வருகின்றனர்.

கடந்த 5 மாதத்தில் தீ விபத்துகள் காரணமாக 105 பேர் சிவகாசியில் மட்டும் உயிரிழந்துள்ளனர். தொடர் பட்டாசு விபத்துகளை தடுப்பதற்காக இந்த ஆய்வுகள் நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஆய்வு என்ற பெயரில் சரவெடிகள் உற்பத்தி செய்யும் பட்டாசு ஆலைகள் மீது பாரபட்சமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பட்டாசு ஆலை உரிமையாளர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தனர். குறிப்பாக பேன்சி ரக பட்டாசுகளில் பேரியம் நைட்ரேட் பயன்படுத்தப்படுவதை தடுக்காமல், சிறு பட்டாசு ஆலைகள் மீது நடவடிக்கை எடுப்பது பாரபட்சமான நடவடிக்கை என அவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

சிறு பட்டாசு ஆலைகள் வேலைநிறுத்தம்
சிறு பட்டாசு ஆலைகள் வேலைநிறுத்தம்

இதனை கண்டிக்கும் வகையில் தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கமான டாப்மா சார்பில் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 150-க்கும் மேற்பட்ட சிறு பட்டாசு ஆலைகள் மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக 10,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையை இழந்துள்ளனர். ஆண்டுக்கு 800 முதல் 1000 கோடி ரூபாய் வரை பட்டாசுகளை உற்பத்தி செய்யும் இந்த பட்டாசு ஆலைகள் மூடப்பட்டு இருப்பதால், அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் அபாயமும் உருவாகியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

கேன்ஸ் திரைப்பட விழாவில் முதல் பரிசு வென்ற இந்திய குறும்படம்... ரசிகர்கள் வாழ்த்து!

வேலை வாங்கி தருவதாக லட்சக்கணக்கில் மோசடி; முன்னாள் பாஜக நிர்வாகி கைது!

அதிர்ச்சி... சிலிண்டர் வெடித்து எரிவாயு கசிவு; 89 பேர் மருத்துவமனையில் அனுமதி!

கட்டுக்கட்டாக பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல்... அதிமுக பிரமுகர் கைது!

ப்ரேக்-அப்... அடுத்த ரிலேஷன்ஷிப்பிற்கு ரெடி... மெளனம் கலைத்த ஸ்ருதிஹாசன்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in