தமிழகத்தில் பட்டாசு வெடிக்கும்போது 364 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டதோடு, பொது மக்கள் பட்டாசு வெடித்து பண்டிகையை கொண்டாடினர். இந்நிலையில், பட்டாசு வெடித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் தீ விபத்து சம்பவங்களும் நிகழ்ந்துள்ளது. தமிழகத்தில் நேற்று 364 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது.
பட்டாசு வெடித்து தீ விபத்து ஏற்பட்டதாக 254 இடங்களில் இருந்து அழைப்பு வந்ததாகவும், 110 இடங்களில் மற்ற வகை தீ விபத்துகள் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சென்னையில் மட்டும் தீபாவளி நாளில் மொத்தம் 102 இடங்களில் பட்டாசுகளால் தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்புத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
9 இடங்களில் மற்ற வகை தீ விபத்து ஏற்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. தீ விபத்தால் உள்நோயாளிகளாக 47 பேரும், புறநோயாளிகளாக 622 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.