அரசு விரைவு பேருந்தில் தனி படுக்கை ஒதுக்கீடு: பெண்களுக்கு மீண்டும் சலுகை

அரசு விரைவு பேருந்தில் தனி படுக்கை ஒதுக்கீடு: பெண்களுக்கு மீண்டும் சலுகை

அரசு போக்குவரத்து கழகத்தில் படுக்கை வசதி கொண்ட பேருந்துகளில் பெண்களுக்கு தனியாக படுக்கை ஒதுக்கீடு செய்ய போக்குவரத்துத் துறை உத்தரவிடப்பட்டுள்ளது.

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நகர்ப்புற பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதனால், ஒரு நாளைக்கு லட்சக்கணக்கான பெண்கள் பயனடைந்து வருகின்றனர். அரசு போக்குவரத்து கழகத்துக்கு இழப்பு என்றாலும், ஒரு மாதத்துக்கு ஆயிரம் ரூபாய்க்கு வரை சேமிக்கும் நிலை பெண்களுக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், அரசு போக்குவரத்து கழகத்தில் படுக்கை வசதி கொண்ட பேருந்துகளில் பெண்களுக்கு தனியாக படுக்கை ஒதுக்கீடு செய்ய போக்குவரத்துத் துறை உத்தரவிடப்பட்டுள்ளது. படுக்கை எண் 1LB மற்றும் 4LB ஒதுக்கீடு செய்து இணையத்தில் முன்பதிவு செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

படுக்கை வசதி கொண்ட குளர்சாதனம், குளிர்சாதனம் இல்லாத பேருந்துகளில் பெண்களுக்கு பிரத்யேக படுக்கை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பேருந்து புறப்படும் வரை பெண் பயணிகள் எவரும் முன்பதிவு செய்யாதபட்சத்தில் 2 படுக்கைகள் பொது படுக்கையாக கருதப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்களின் பாதுகாப்பு மற்றும் வசதியை கருத்தில் கொண்டு அவர்களுக்கெண பிரத்யேக படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in