நாம் தமிழர் கட்சி பாஜகவின் ‘பி டீம்’ இல்லை... அண்ணாமலைக்கு நன்றி சொன்ன சீமான்!

சீமான் - அண்ணாமலை
சீமான் - அண்ணாமலை

"பாஜகவின் ‘பி டீம்’ நாம் தமிழர் கட்சி என்று சொல்லி வந்தார்கள். ஆனால், பாஜகவின் ‘பி டீம்’ நாங்கள் இல்லை என்பதை அண்ணாமலை நிரூபித்துவிட்டார்" என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி போட்டியிடுகிறது. இந்த தேர்தலிலும் யாருடனும் கூட்டணி வைக்காமல் தனித்தே களம் காண்கிறது நாதக. கரும்பு விவசாயி சின்னத்திற்கு மறுப்பு தெரிவித்த தேர்தல் ஆணையம், நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. இந்நிலையில், மைக் சின்னத்தை மக்களிடையே கொண்டு செல்லும் பணியில் நாதக தொண்டர்கள் தீவிரமாக களப்பணி ஆற்றி வருகின்றனர். மேலும், ஒவ்வொரு தொகுதியாக தேர்தல் பிரச்சாரத்திலும் நாதக வேட்பாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

தென்காசியில் சீமான் பிரச்சாரம்
தென்காசியில் சீமான் பிரச்சாரம்

இந்நிலையில், தென்காசியில் நாதக வேட்பாளருக்கு ஆதரவாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது மக்களிடையே பேசிய அவர், பாஜக தலைவர் அண்ணாமலையை கிண்டல் செய்து பேசினார். அதில், "நாம் தமிழர் கட்சிக்கு வளர்ச்சிக்கு பாஜக தலைவர் அண்ணாமலை மறைமுகமாக செயல்பட்டு வருகிறார். நாம் தமிழர் கட்சியிலும் ரைடு விட்டு தன்னை உலக அளவிற்கு உயர்த்தி சென்றுவிட்டார். விவசாயி சின்னத்தை பறித்து மைக் சின்னத்தை கொடுத்து, நாம் தமிழர் கட்சி பாஜகவின் பி டீம் இல்லை என்பதை நிரூபித்து விட்டார். என்னை மிகப்பெரிய தலைவனாக்க பாஜகவில் இருந்து அண்ணாமலை போராடிக் கொண்டிருக்கிறார். அவருக்கு எனது அன்பும், நன்றியும்.." என்று கிண்டலாக பேசினார் சீமான்.

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம்
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம்

மேலும் பேசிய சீமான், "ஒரே நாடு, ஒரே தேர்தல் என்று சொல்லும் பாஜக, ஒரே நாளில் ஏன் தேர்தலை நடத்தவில்லை என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும். எளிதாக வெல்லக்கூடிய மாநிலங்களில் பல கட்டமாக மக்களவைத் தேர்தல் நடத்தப்படுகிறது. பாஜக வெல்வதற்கு கடினமான மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. மத்திய அரசின் வசதிக்கேற்ப தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த 10 ஆண்டுகால ஆட்சியில் மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாத பாஜக, இனி வரும் காலங்களில் நல்லது செய்யும் என்பதை எப்படி ஏற்க முடியும். அதனால் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்

இதையும் வாசிக்கலாமே...    
காங்கிரஸ் கட்சிக்கு அடுத்த அதிர்ச்சி... ரூ.1,700 கோடி அபராதம் செலுத்த வருமான வரித்துறை நோட்டீஸ்!

அதிர்ச்சி... மாமியாரை தரதரவென இழுத்துச் சென்று குப்பைக் கிடங்கில் போட்ட மருமகள்!

பகீர்... ஒரே இடத்தில் 60 பசுக்கள் கொலை...10,000 கிலோ இறைச்சி பறிமுதல்!

கோயிலுக்கும், மசூதிக்கும் ஒரே பெயர் பலகை; கெத்து காட்டும் குடியிருப்புவாசிகள்!

திட்டமிட்டு கொல்லப்பட்டாரா முக்தார் அன்சாரி; மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவு

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in