'துப்பறியும் வேலையை நீங்களே பாருங்கள்!' : திமுக எம்எல்ஏவிற்கு தங்கம் தென்னரசு சூடான பதில்

'துப்பறியும் வேலையை நீங்களே பாருங்கள்!' : திமுக எம்எல்ஏவிற்கு தங்கம் தென்னரசு சூடான பதில்

" சிப்காட் அமைக்க நிலத்தைக் கண்டறிய துப்பறியும் வேலையை நீங்களே பார்த்துச் சொன்னால் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர் கிரிக்கு, அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் நான்கு நாட்களுக்குப் பிறகு இன்று கூடியது. அப்போது மறைந்த டேபிள் டென்னிஸ் வீரர் விஷ்வா தீனதயாளனுக்கு 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதன் பின் கேள்வி நேரத்தின் போது, திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி பேசுகையில், " செங்கம் தொகுதி மேல்செங்கத்தில் நிலத்தைக் கண்டறிந்து சிப்காட் தொழிற்பூங்கா அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.

இதற்கு தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்து பேசுகையில், " நான் எனக்கு இருக்கும் வேலையை விட்டு விட்டு நிலத்தைக் கண்டறிந்து தொழிற்பூங்கா அமைப்பது இயலாத காரியம். அத்தகைய துப்பறியும் வேலையை தாங்களே பார்த்துச் சொன்னால் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறினார்.

Related Stories

No stories found.