தனுஷ்கோடியில் கடல் சீற்றம்: மிரட்டும் ராட்சத அலைகள்

தனுஷ்கோடியில் கடல் சீற்றம்: மிரட்டும் ராட்சத அலைகள்

தனுஷ்கோடியில் கடல் சீற்றத்தின் காரணமாக ராட்சத அலைகள் எழுந்து வருகின்றன. இதன் காரணமாக அப்பகுதியைச் சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. சுற்றுலாப் பயணிகளும் கடலுக்குச் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.

மன்னர் வளைகுடா பகுதியில் வீசும் சூறைக்காற்று காரணமாக ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. பாம்பன், கீழக்கரை, மண்டபம், வாலிநோக்கம் உள்ளிட்டப் பகுதிகளிலும் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. கடல் சீற்றம் காரணமாக மன்னர் வளைகுடா பகுதியில் மீன்பிடிக்கச் செல்லும் நாட்டுப்படகு மீனவர்கள் இன்று மீன்பிடித் தொழிலுக்குச் செல்லவில்லை.

இதேபோல் தனுஷ்கோடி பகுதியில் 20 அடி உயரம்வரை ராட்சத அலைகள் வீசுவதன் காரணமாக முகுந்தராயர் சத்திரம் பகுதியில் மீன் இறங்குதளத்தைப் பார்வையிடச் செல்லும், சுற்றுலாப் பயணிகளுக்குக் காவல் துறையினர் அனுமதி மறுத்தனர். இதனால் தனுஷ்கோடி வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். அரிச்சல்முனைப் பகுதியிலும் தொடர் கடல் சீற்றம் காரணமாக சுற்றுலாப் பயணிகள் கடற்கரையில் அனுமதிக்கப்படவில்லை.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in