பள்ளிகள் திறப்பு, பொதுத் தேர்வு தேதியை அறிவித்தார் அமைச்சர் அன்பில் மகேஷ்!

பள்ளி திறப்பு
பள்ளி திறப்பு

தமிழகத்தில் வரும் கல்வியாண்டிற்கான பள்ளி திறப்புகளுக்கான தேதியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தற்போது வெளியிட்டுள்ளார். மேலும் காலாண்டு, அரையாண்டு, பொதுத் தேர்வுகள் நடைபெறும் தேதிகளையும் அவர் வெளியிட்டுள்ளார்.

கரோனா காரணமாக 2021-22-ம் கல்வியாண்டில் ஒன்று முதல் 9-ம் வகுப்புகளுக்கான தேர்வுகள் மே மாதம் வரை நடைபெற்ற நிலையில், அவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 1-9-ம் வகுப்பு மாணவர்களுக்கு 2021-22 கல்வி ஆண்டில் ஜூன் 13-ம் தேதி பள்ளிகள் தொடங்கும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது இந்நிலையில், பள்ளிகள் தொடங்கும் தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படுவதாக கல்வித்துறை தெரிவித்திருந்தது.

அதன்படி பள்ளிகள் திறப்பு குறித்தான அறிவிப்பைப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். அவர் கூறுகையில், “தமிழகத்தில் 1 முதல் 10-ம் வகுப்பு வரையிலான வகுப்புகள் ஜூன் 13-ல் தொடங்கும். 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20-ம் தேதியும், 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 27-ம் தேதியும் வகுப்புகள் தொடங்கப்படும்” என கூறினார்.

மேலும் காலாண்டு, அரையாண்டு மற்றும் பொதுத்தேர்வுக்கான அட்டவணைகளும் வெளியிடப்படும் எனக் கல்வித்துறை அதிகாரிகள் ஏற்கெனவே தெரிவித்திருந்தனர். அந்த அறிவிப்பையும் அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ளார். அதன்படி, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு 13.03 2023-ல் தொடங்கும் எனவும், 11-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் 14.03 2023-ல் தொடங்கும் எனவும், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு 03.04.2023-ல் தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in