லைகா நிறுவனம் குறித்து பேச்சு... சவுக்கு சங்கரின் வீடியோவை முடக்கியதாக யூடியூப் தகவல்!

லைகா நிறுவனம்
லைகா நிறுவனம்

லைகா நிறுவனம் குறித்து சவுக்கு சங்கர் யூடியூப் சேனலில் வெளியிட்ட வீடியோவை முடக்கிவிட்டதாக யூடியூப் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கபட்டுள்ளது.

சவுக்கு சங்கர் தனது சவுக்கு மீடியா யூ டியூப் பக்கத்தில் லைகா நிறுவனத்தை போதை கடத்தல் கும்பலுடன் தொடர்புபடுத்தி பேசி வீடியோ வெளியிட்டிருந்தார். இதை எதிர்த்து லைகா நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அந்த மனுவில், 'தமிழக திரை உலகிலும், உலகளவிலும் லைகா நிறுவனத்திற்கு இருக்கும் நற்பெயருக்கு களங்கும் விளைவிக்கும் வகையில் சவுக்கு சங்கரின் பேச்சு அமைந்துள்ளது. அதனால், ஒரு கோடியே ஆயிரம் ரூபாய் மான நஷ்ட ஈடாக வழங்க உத்தவிட வேண்டும். இந்த வீடியோ மூலம் கிடைத்த தொகையை டெபாசிட் செய்ய உத்தரவிட வேண்டும். யூடியூப் பக்கத்தில் உள்ள அந்த வீடியோவை நீக்க உத்தரவிட வேண்டும்' என்று வலியுறுத்தப்பட்டது.

சவுக்கு சங்கர்
சவுக்கு சங்கர்

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, லைகா நிறுவனம் குறித்து அவதூறு கருத்துகளை தெரிவிக்க சவுக்கு சங்கருக்கு இடைக்கால தடை விதித்தார். இந்த வீடியோக்கள் மூலம் கிடைத்த வருமான தொகையை நீதிமன்றத்தில் செலுத்த யூடியூப் நிறுவனத்துக்கு உத்தரவிட்டார்.

இந்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திக்கேயன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, யூடியூப் தரப்பில், லைகாவிற்கு எதிராக சவுக்கு சங்கர் பேசிய வீடியோவை முடக்கிவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு தொடர்பாக சவுக்கு சங்கர் பதிலளிக்க உத்தரவிட்டும், சவுக்கு சங்கருக்கு எதிரான இடைக்கால உத்தரவை ஜூன் 6ம் தேதி வரை நீட்டித்தும், விசாரணையை நீதிபதி தள்ளி வைத்தார்.

இதையும் வாசிக்கலாமே...   

ரூ.10 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட முக்கிய குற்றவாளிகள் இருவர் கைது... ராமேஸ்வரம் கஃபே வழக்கில் பரபரப்பு!

ஜிஎஸ்டி குறித்து கேள்வி எழுப்பிய பெண் மீது பாஜகவினர் தாக்குதல்... திருப்பூரில் பரபரப்பு; அதிர்ச்சி வீடியோ!

தெலங்கானாவில் இருந்து ரயிலில் போதை மாத்திரைகள் கடத்தல்... சென்னையில் 3 பேர் கைது!

ப்ளீஸ்... இதையாவது செய்யுங்க... ரஜினிக்கு நெருக்கடி தரும் பாஜக!

குடியால் நேர்ந்த சோகம்...30 வயதில் அகால மரணம் அடைந்த பிரபல பாடகி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in