1 முதல் 5- வகுப்பு மாணவர்களுக்கு சனிக்கிழமை விடுமுறை?

1 முதல் 5- வகுப்பு மாணவர்களுக்கு சனிக்கிழமை விடுமுறை?

தமிழகத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு சனிக்கிழமை விடுமுறை அளிக்க தமிழக பள்ளி கல்வித்துறை பரிசீலனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டது. இதனால் மாணவர்களின் கற்றல்திறன் பாதிக்கப்பட்டதால் 1 முதல் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கு அனைத்து சனிக்கிழமைகளும் பள்ளிகள் வேலை நாளாக செயல்படும் என அரசு அறிவித்தது. அதன்படி அனைத்து சனிக்கிழமையும் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.

தற்போது கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகம் இருப்பதால் 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு சனிக்கிழமைகளில் விடுமுறை அறிவிக்க வேண்டும் என பெற்றோர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். பெற்றோரின் கோரிக்கையை ஏற்று 1 முதல் 5-ம் வகுப்பு வரை அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை வழங்குவது குறித்து தமிழக பள்ளி கல்வித்துறை பரிசீலித்து வருவதாகவும் இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in