
``விழுப்புரம், ராமநாதபுரத்தில் ரூ.10 காேடியில் புதிய அருங்காட்சியகம் அமைக்கப்படும்" என்று நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
2022-2023-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்து பேசுகையில், விழுப்புரம், ராமநாதபுரத்தில் ரூ.10 காேடியில் புதிய அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்றும் குற்றாலத்தில் பழங்குடியினர் அகழ்வைப்பகம், பூண்டி, தருமபுரியில் அகழ்வைப்பகம் ரூ.10 கோடியில் அமைக்கப்படும் என்றும் கூறினார்.
சாத்தனூர், மேட்டூர், பாபநாசம் ஆகிய பெரிய அணைகளை புனரமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் 1 முதல் 10-ம் வகுப்பு வரை இலவச பாடப்புத்தகங்கள் வழங்க ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் கொற்கையில் ரூ.5 கோடியில் ஆழ்கடல் ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும் நீர்நிலை பாதுகாப்பு, அரசு நிலங்களை மீட்க ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் கூறினார்.