தமிழகத்தில் மதுபானங்களின் விலை அதிரடி உயர்வு

அரசுக்கு ஆண்டுக்கு ரூ.4,396 கோடி கூடுதல் வருவாய்
தமிழகத்தில் மதுபானங்களின் விலை அதிரடி உயர்வு

தமிழகத்தில் இன்று முதல் டாஸ்மாக் மதுபானங்களில் விலை உயர்வு அமலுக்கு வருகிறது. மதுபானங்களின் விலை உயர்வால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.4,396 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் என தெரியவந்துள்ளது.

ஒருபக்கம் டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி மக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் மறுபக்கம் டாஸ்மாக் கடைகள் புதிதாக திறக்கப்பட்டு வருகிறது. அரசுக்கு அதிக வருவாய் டாஸ்மாக் மதுபான விற்பனை மூலம் கிடைத்து வருகிறது. கடைசியாக கரோனா பாதிப்பு ஏற்படும் முன்பு, 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 7ம் தேதி டாஸ்மாக் மதுபான வகைகளின் விலை உயர்த்தப்பட்டது.

இந்நிலையில், கடந்த 5ம் தேதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மது விலக்கு ஆயத்தீர்வை துறையில் வரி மற்றும் விற்பனை வரியை உயர்த்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதனால் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி மது பானங்களின் விலை ரூ.10 முதல் ரூ.80 வரை உயர்த்தப்பட்டுள்ளன. இந்நிலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது.

அதன்படி, பீர் வகை மதுபானங்களின் விலை ரூ.10 உயர்ந்துள்ளது. குவாட்டர் ஒன்றிற்கு சாதாரண ரகங்கள் ரூ. 10-ம், மீடியம், உயர் ரகங்கள் ரூ.20-ம் விலை உயர்ந்துள்ளது. ஆப் பாட்டில் சாதாரண ரகங்கள் ரூ.20-ம், மீடியம், உயர் ரகங்களுக்கு ரூ.40-ம் விலை உயர்ந்துள்ளது. புல் பாட்டில் சாதாரண ரக மதுபானங்களுக்கு ரூ.40-ம், மீடியம் மற்றும் உயர் ரகங்களுக்கு ரூ.80-ம் விலை உயர்த்தப்பட்டுள்ளது. க்ஷ

மதுபானங்களின் விலை உயர்வு மூலம் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.4,396 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் என தெரியவந்துள்ளது. பீர் வகை மதுபானத்தின் விலை உயர்வு மூலம் மட்டும் அரசுக்கு ஒரு நாளைக்கு ரூ.1.76 கோடி கூடுதல் வருவாய் வர வாய்ப்புள்ளது என்று தெரிகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in