அதிக வருவாயை குவித்தது பதிவுத் துறை, வணிகவரித் துறை

முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்ற அமைச்சர் மூர்த்தி
அதிக வருவாயை குவித்தது பதிவுத் துறை, வணிகவரித் துறை

2021-22-ம் நிதியாண்டில் பதிவுத்துறையில் நிர்ணயிக்கப்பட்டதைவிட ரூ.661.09 கோடி அதிகமாக வருவாய் ஈட்டியதற்காவும், வணிகவரித் துறையில் நிர்ணயிக்கப்பட்டதைவிட ரூ.8,861 கோடி அதிகமாக வருவாய் ஈட்டியதற்காகவும் முதல்வரை சந்தித்து அமைச்சர் மூர்த்தி வாழ்த்துப் பெற்றார்.

கடந்த மார்ச் மாதம் நடந்த சட்டப்பேரவை கூட்டத்தில் பேசிய பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி பேசும், ‘‘பதிவு அலுவலகத்தைப் பொறுத்தவரை 50 ஆண்டுகளுக்குப்பின் சில அலுவலகங்கள், தாலுகா விட்டு தாலுகா, மாவட்டம் விட்டு மாவட்டம் என முறையின்றி அமைந்துள்ளதால், தமிழகம் முழுவதும் உள்ள சார் பதிவாளர் அலுவலக எல்லைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. பதிவுத் துறை வரலாற்றில் இல்லாத அளவுக்கு, கரோனா, மழை வெள்ளக் காலங்களை கடந்து ரூ.13,218 கோடி பதிவு வருவாய் பெறப்பட்டுள்ளது. வணிகவரித் துறை முதலிடத்தில் இருந்தாலும், அதிக நிதியைப் பெற்றுள்ளோம்’’ என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி இன்று சந்தித்து பேசினார். அப்போது, 2021-22-ம் நிதியாண்டில் பதிவுத்துறையில் நிர்ணயிக்கப்பட்ட ரூ.13,252.56 கோடியைவிட ரூ.661.09 கோடி அதிகமாக வருவாய் ஈட்டியதற்காகவும், வணிகவரித் துறையில் நிர்ணயிக்கப்பட்ட ரூ.96,109 கோடியை விட ரூ.8,861 கோடி அதிகமாக வருவாய் ஈட்டியதற்காகவும் வாழ்த்து பெற்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in