தக்காளிக்கும், வைரஸுக்கும் தொடர்பா?: சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்

தக்காளிக்கும், வைரஸுக்கும் தொடர்பா?: சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்

கேரளாவில் பரவும் தக்காளி வைரஸை கண்டு மக்கள் அச்சடைய வேண்டாம். சிவப்பு நிறப் புள்ளிகள் தோன்றுவதால் தக்காளி வைரஸ் எனப் பெயரிடப்பட்டுள்ளது. தக்காளிக்கும், வைரஸுக்கும் தொடர்பில்லை என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கமளித்துள்ளார்.

வைரஸ்
வைரஸ்

கேரளத்தில் 'தக்காளி வைரஸ்' என்ற புதுவகையான வைரஸ் பரவி வருகிறது. இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கை, கால்கள் வெளிறிப் போதல், காய்ச்சல் மற்றும் உடல்வலி ஆகிய பாதிப்புகள் ஏற்படுகின்றன. குறிப்பாக ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அதிக அளவில் இந்த வைரஸ் தாக்குதல் இருப்பதாக செய்திகள் வெளியாகின்றன.

இந்நிலையில், சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், “கேரளத்தில் பரவி வரும் தக்காளி வைரஸ் குறித்து அம்மாநில அரசு அதிகாரிகள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் விவாதித்தோம். ஒருங்கிணைந்த தகவல் பரிமாற்று முறையின்படி தக்காளி வைரஸ் குறித்து தகவல்களைக் கேட்டறிந்தோம். ஏற்கெனவே சிக்கன் குனியாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த வைரஸ் தொற்று பரவுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நல்ல தண்ணீரில் இருக்கும் கொசுக்கள் மூலம் இந்த வைரஸ் பரவுகிறது. இவ்வகை கொசுக்கள் கடிப்பதால் தோலில் சிவப்பு நிறத்தில் புள்ளிகள் ஏற்படுகின்றன. மற்றபடி தக்காளிக்கும் வைரஸுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. தமிழக மக்கள் இந்த வைரஸ் குறித்து அச்சமடைய வேண்டாம். தமிழக சுகாதாரத்துறை எவ்வகை வைரஸையும் எதிர் கொள்ளும் நிலையில் உள்ளது.” என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in