ரூ.190 கோடியில் 149 சமத்துவப்புரங்கள் சீரமைப்பு#TNBudget2022

ரூ.190 கோடியில் 149 சமத்துவப்புரங்கள் சீரமைப்பு#TNBudget2022

``முதற்கட்டமாக 149 சமத்துவப்புரங்கள் சீரமைக்கப்படும்" என்று நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

2022-2023-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்து பேசுகையில், தமிழகத்தில் முதல்கட்டமாக 149 சமத்துவப்புரங்கள் ரூ.190 கோடியில் சீரமைக்கப்படும். வானிலையை துல்லியமாக கணிக்க சூப்பர் கம்ப்யூட்டர் உள்ளிட்ட வானிலை மேம்பாட்டு பணிக்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2 ரேடார்கள், 100 தானியங்கி வானிலை மையங்கள் 400 தானியங்கி மழைமானிகள் அமைக்கப்படும்.

மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு ரூ.2,800 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்துக்கு ரூ.705 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.