மக்களே, நாளை ரேஷன் கடைகள் செயல்படும்!- தமிழக அரசு அறிவிப்பு

ரேஷன் கடை
ரேஷன் கடைhindu கோப்பு படம்

தமிழகத்தில் ரேஷன் கடைகள் நாளை வழக்கம்போல் செயல்படுவதால், அட்டைதாரர்கள் தேவையான பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், நாளை தமிழகத்தில் ரேஷன் கடைகள் வழக்கம்போல் செயல்படும் என்றும், பொது விநியோக திட்டத்தின்கீழ் ஞாயிற்றுக்கிழமையான நாளை அத்தியாவசியப் பொருட்களை பொதுமக்கள் பெறுவதற்காக, ரேஷன் கடைகளுக்கு பணிநாளாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடுமுறை நாளுக்குப் பதிலாக பிப்ரவரி 26-ம் தேதி நியாயவிலை கடைகளுக்கு விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in