தமிழகத்தில் மழை குறையும்; வெப்பநிலை அதிகரிக்கும் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம்
சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் மழை குறையும் என்றும் மாறாக வெப்பநிலை அதிகரிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மத்திய வங்கக்கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற்று வங்கக் கடற்கரையை நோக்கி நகரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெயில்
வெயில்

தமிழகத்தை பொறுத்தவரை பிற்பகல் 3 மணி வரை மழையின் அளவு குறைவாகவே இருக்கும். மாறாக பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக காணப்படும். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மதுராந்தகம், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளில் 26 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலை பதிவாகி உள்ளது. கடலூர், சேலம்,நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளிலும் வெப்ப நிலை அதிகமாக பதிவாகியுள்ளது. இதேபோல் தென் மாவட்டங்களிலும் 25 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

மழை
மழை

இன்று மாலையிலிருந்து நாளை காலைக்குள் வங்க கடற்கரை பகுதியில் புயல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக காற்றின் ஈரப்பதம் அதிகரித்து, சில இடங்களில் மழைப்பொழிவு இருக்கும். அதன்படி, பிற்பகல் 3 மணிக்கு பிறகு தென்காசி, கடலூர், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in