தமிழகத்தில் இன்றும், நாளையும் மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் இன்றும், நாளையும் மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகம், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்றும், நாளையும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வுமைய இயக்குநர் செந்தாமரைக் கண்ணன் இன்று விடுத்துள்ள அறிக்கையில், “தமிழகம், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஞாயிற்றுக் கிழமையான இன்று லேசானது முதல் மிதமானது வரை இடி, மின்னலுடன் கூடிய மழை பொழியும். கரூர், நாமக்கல், திருப்பத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, திண்டுக்கல், தேனி, திருப்பூர், கோவை, நீலகிரி ஆகிய இடங்களில் கனமழை பெய்யும். இதேபோல் புதுவை, காரைக்கால், மற்றும் தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் நாளை கன மழை பொழியும்.

இதில் திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர், தர்மபுரி, நாமக்கல், கரூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருச்சி, ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்யும். கடந்த 24 மணிநேரத்தில் திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவிலில் அதிகபட்சமாக 7 செ.மீ மழை பதிவாகி உள்ளது.”என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in