தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் கனமழை... வானிலை மையம் எச்சரிக்கை!

மழை
மழை

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரங்களில் ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் அளவு 100 டிகிரியைத் தாண்டி பதிவாகி வருகிறது. குறிப்பாக வட தமிழக உள் மாவட்டங்களில் நேற்று ஓரிரு இடங்களில் இயல்பைவிட மிக அதிகமாக வெப்பம் இருந்தது.

வெயில்
வெயில்

கடலோரப் பகுதிகள், புதுச்சேரியில் இயல்பை ஒட்டி இருந்தது. ஆனால், தமிழக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் வெப்ப அலை வீசியது. அதிகபட்சமாக கரூர், ஈரோடு, மதுரை விமான நிலையம் பகுதிகளில் 106 டிகிரி வெயில் நிலவியது. திருச்சி 104 , பாளையங்கோட்டை, நாமக்கல் 102, திருப்பத்தூர், சேலம், கோவை 100, சென்னை, தஞ்சை, வேலூர் 99 டிகிரி வெயில் பதிவானது.

தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தென்காசி, நெல்லை மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம், விழுப்புரம்,திருவண்ணாமலை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் நேற்று கனமழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் வெப்பத்தின் தாக்கம் சற்று குறைந்தது. கீழடுக்கு சுழற்சியில் ஒரு பகுதி கிழக்கு நோக்கி நகர்ந்ததால் சென்னை மற்றும் புறநகரில் சில இடங்களில் நேற்று மழை பெய்தது.

இதையடுத்து, நீலகிரி, கோவை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, திருப்பூர் மாவட்டங்களில் இன்று ஒருசில இடங்களில் கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மே12-ம் தேதி வரை மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது.

மழை
மழை

இதனால், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிக பட்ச வெப்பநிலை 2 டிகிரி வரை படிப்படியாக குறையும். அதேசமயம் உள் மாவட்டங்களில் இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை ஒரு சில இடங்களில் வெயில் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது என வானிலை மையம் கூறியுள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 7 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறையில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in