`தமிழ் மொழியை கற்றுக் கொள்ளுங்கள்'- ரயில்வே ஊழியர்களுக்கு அமைச்சர் திடீர் அறிவுறுத்தல்
அஸ்வினி வைஷ்ணவ்

`தமிழ் மொழியை கற்றுக் கொள்ளுங்கள்'- ரயில்வே ஊழியர்களுக்கு அமைச்சர் திடீர் அறிவுறுத்தல்

சென்னை ஐசிஎப்-ல் தயாராகும் வந்தே பாரத் ரயில் பெட்டிகளை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு செய்தார். அப்போது தமிழகத்தில் உள்ள ரயில்வே ஊழியர்கள் தமிழை கற்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

வந்தே பாரத்
வந்தே பாரத்

வந்தே பாரத் ரயில் குறித்து பிரதமர் மோடி அறிவிப்பு வெளியிட்டிருந்தார். முதற்கட்டமாக 102 வந்தே பாரத் ரயில்களை உருவாக்கத் திட்டமிடப்பட்ட நிலையில், சென்னையில் உள்ள ஐசிஎப்-ல் வந்தே பாரத் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகளை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இன்று காலை பார்வையிட்டார். பயணிகள் இருக்கைகள், கழிவறைகள் அமையும் பகுதிகளை ஆய்வு செய்தார்.

அப்போது பேசிய அஸ்வினி வைஷ்ணவ், “160 கி.மீ வேகத்தில் செல்லக் கூடிய அதிநவீன என்ஜின்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. அதிவேகமாகச் செல்லும் வகையில் வந்தே பாரத் ரயில்கள் உருவாக்கப்படுவதால் தண்டவாளங்களை சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும். ரயில் பாதைகளில் யானைகள் அடிபட்டு உயிரிழப்பதால், அத்தகைய பகுதிகளில் சுரங்கங்கள் அமைக்கப்படும். பிறமாநிலங்களிலிருந்து தமிழகத்தில் ரயில்வே பணிகளில் பணிபுரிபவர்கள் தமிழைக் கற்க வேண்டும்” என்றார்

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in